திருச்செந்தூர் கடலுக்கு செல்ல தடை..! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சம்பித்து போன பக்தர்கள்..!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
சூரபத்மனைப் போரில் வென்று செந்தில் முருகன் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகாமையில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த வகை மீன்கள் தமிழ் மாதம் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடற்கரையில் காணப்படும். கண்ணாடி போன்று மீன்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால் அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.
திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை :
திருச்செந்தூர் கோவில் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றதால் பக்தர்களுக்கு தோல் அலர்ஜி மற்றும் ஊறல் ஏற்படும் என கூறப்படுகிறது.
மேலும் கடலில் குளிக்கும் பக்தர்கள் மேல் இவ்வகை மீன்கள் பட்டதும் ஊறல் ஏற்படுகிறது. சில சமயம் ஊறல் ஏற்படுவதோடு தோல் உரிந்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் கவனமாக இருக்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
– பவானி கார்த்திக்