சத்தான சாமை முருங்கை இலை முறுக்கு..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சாமை அரிசிமாவு
- 1 கப் பச்சரிசிமாவு
- அரை கப் வறுத்து அரைத்த உளுந்தம் மாவு
- 2 ஸ்பூன் வெண்ணெய்
- 2 ஸ்பூன் எள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- பொரிப்பதற்கு கடலை எண்ணெய்
- 4 ஸ்பூன் முருங்கை இலை பொடி
செய்முறை:
- முருங்கை இலையை காயவைத்து அரைத்து அந்த பொடியை சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- சாமை அரிசி மற்றும் பச்சரிசியை அரைத்து மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- உளுத்தம் பருப்பை வறுத்து பின் மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்த மூன்று மாவினையும் சல்லடையில் சலித்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
- அகலமான பாத்திரத்தில் சலித்த மூன்று மாவினையும் சேர்க்கவும்.
- அதில் முருங்கை இலை பொடி, வெண்ணெய், எள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி முறுக்கு பிழியும் அளவிற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
- முறுக்கு பிழியும் அச்சை கையில் எடுத்து அதில் விருப்பமான அச்சினை போட்டு மாவினை உள்ளே வைத்து ரெடியாக வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் முறுக்கினை பிழிந்து விடவும்.
- மிதமான தீயில் வேகவைக்கவும்.
- ஒருபக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு அதையும் சிவக்கும் வரை வேகவைக்கவும்.
- பின் வாணலில் இருந்து ஓட்டை உள்ள கரண்டியை பயன்படுத்தி முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியும் வரை வடித்து பின் தனியே வைக்கவும்.
- அவ்வளவுதான் சாமை முருங்கை இலை முறுக்கு ரெடி.