இந்திய கிரிக்கெட்டி அணியின் பெயரை மாற்றணுமா..?
ஆசிய கோப்பை தொடருக்காக 17பேர் கொண்ட இந்திய அணியில்.., 7 பேர் மும்பை அணிக்காக ஆடி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் மும்பை கிரிக்கெட் லாபி அணி எப்பொழுதும் இணைந்து சதம் அடிப்பது வழக்கம்.., மும்பை அணிக்காக ஆட்டம் ஆடும் வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்காக மும்பை மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பலவற்றையும் செய்வார்கள்.
மும்பை அணியில் இருந்து இந்திய அணிக்காக ஆடிய வீரர்களின் எண்ணிக்கையும்.., மற்ற மாநிலங்களில் இருந்து ஆடும் வீரர்களின் எண்ணைக்கையும் சமமாக இருக்கும். ஆனால் கிரிக்கெட்டில் மும்பை அணிகென்று தனி சிறப்பு உள்ளது, ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கூட மும்பை நகரத்திற்கு என்று தனி அணியாகவே உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் மும்பை அணியை சேர்ந்தவர்கள்.
ஆசியக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட 17 இந்திய வீரர்களில், 7 பேர் மும்பை அணியுடன் தொடர்புடையவர்கள். கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆட்டம் அடியவர்கள்.
CSK vs DC போட்டியை வைத்து மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு.. ஆசியக் கோப்பைத் தொடருக்கான அணியில் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தேர்வு செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்திய அணியை மும்பை அணிதான் தூக்கி நிறுத்துவதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்து வருவதால்.., இந்திய அணியின் பெயரை மாற்றிவிடலாமா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.