மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினரையே உருவான போராட்டம் தற்போது பெரும் கலவரமாக வெடித்துள்ளது.
பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு 7,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலவரம் நீடித்து வருவதால் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Discussion about this post