பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக அசத்திய த்ரிஷா தற்போது விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லியோ படக்குழு த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் “லியோ”. செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் பேனரின் கீழ் லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படம் விஜய்க்கு மட்டும் இல்லாமல் த்ரிஷாவிற்கு 67வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களைத் தொடர்ந்து த்ரிஷா விஜய் கூட 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.
சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் தற்போது லியோ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், லியோ படப்பிடிப்பு தளத்தில் பேக்கரி ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்து வருகிறது.
trisha-birthday-thalapathy-vijay-and-trisha-from-the-sets-of-leo
Discussion about this post