அமித்ஷாவுக்கு காத்திருந்த ஷாக்..!! இனி தென்காசியில்..?
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வரவுள்ளார். குறிப்பாக நெல்லை, கோவையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பளார்களை ஆதரத்தி பரப்புரை செய்யவுள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ்நாட்டின் மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் மாலை தென்காசிக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்காசியில் நடைபெற இருந்த அமித்ஷாவின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி 2 வது முறையாக ரத்து செய்யபட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ்நாட்டின் மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 13 ஆம் தேதி தென்காசிக்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், தற்போது அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் வருகைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட பாஜகவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரத்திற்காக அமித்ஷா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களுக்காக பிரச்சார பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக தற்போது பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..