எடப்பாடிக்கு ஷாக்..! ராகுல் காந்தி வைத்த செக்..! சுக்குநூறான அதிமுக..!!
கடந்த 2014ம் ஆண்டு அதானி குழுமம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விற்பனை செய்ததில் மிகப்பெரிய ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக இருக்கும் இந்த மோசடி மூலம் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குறைந்த தர நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு அதிகமாக விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.
ED, CBI மற்றும் IT இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருந்துள்ளன. அவர்கள் இப்படி அமைதியாக எத்தனை “டெம்போக்கள் பணம்” பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சொல்வாரா..?
கடந்த ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு சொல்லும்., என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அதானி குறைந்த தர நிலக்கரியை தமிழ்நாட்டிற்கு மின்சார வாரியத்திற்கு அதிக விலைக்கு விற்று மோசடி செய்துள்ளாதாக கூறியுள்ளார். அவர் சொன்னதாவது கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியின் போது. அதானி குழுமம் குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை, தமிழ்நாடு அரசின் அரசு மின் பயன்பாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதை தான் அவர் விசாரிக்க போவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் கூறியதாவது..
அதில் அவர் கூறியதாவது, அதிமுக பரிதாபமாக போய்விட்டது. ராகுல் காந்தி அதிமுகவை சுக்குநூறாக உடைத்து விட்டார். அதானியிடம் அதிமுக அரசு வாங்கிய நிலக்கரி ஊழலை பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
இதை ராகுல் காந்தி செய்வார் என அதிமுக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் அதிமுக பீதியில் உள்ளது . 2024ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இதை பற்றி விசாரணை செய்வோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். இதனால் அதிமுக சுக்குநூறாக உடைந்து விடும்.
இப்போது செல்லூர் ராஜு, ராகுல் காந்தியிடம் இணைய நினைப்பதும் இதற்காக தான். ராகுல் காந்தியிடம் யாரும் எடப்பாடிக்காக போய் பேச மாட்டார்கள். அவருக்காக வக்காலத்து வாங்க மாட்டார். சுனில், எடப்பாடிக்கு ஆதரவாக காங்கிரஸிடம் பேசுவார் என பலரும் நினைத்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அதெல்லாம் பொய். காங்கிரஸ் – அதிமுகவுடன் எப்பொழுதும் கூட்டணி வைத்துக்கொள்ளாது. என இவ்வாறே அவர் பேசினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..