எச்சரிக்கை கொடுத்த சேகர்பாபு..!! பிற மதத்தினர் பற்றி தவறாக..?
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொள்ள சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.., பிறமதத்தினர் பற்றி தவறாக பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.., பிற மதத்தினர் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கு தமிழக அரசு தயங்காது என எச்சரிக்கை கொடுத்துள்ளார்..
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலையில் உள்ள அருள்மிகு “சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்” மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.. இதனை மேற்பார்வையிட சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.., செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியகட்சி செயலாளர்.., ஈரோடு மாவட்ட கலெக்டர் உட்பட பலரும் சென்றிருந்தனர்..
மேற்பார்வைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு.., திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மதத்தினரும்.. சுதந்திரமாகவும்.., பாதுகாப்பாகவும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது..
சென்னிமலையை எங்கள் மலையாக மாற்றுவோம் என பேசிய சரவணன் என்பவர் மீது கொலை மிரட்டல்.., மதக்கலவரம் தூண்டல் போன்ற செயல்களின் செயல்படுபவர்கள் கைது செய்யபடுவார்கள்..
மதங்களை பிரித்து வைத்து பார்க்க தமிழக முதலவர் ஆசைப்படவில்லை., அப்படி மதவெறியை தூண்டி விடுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்..,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..