சங்கர் ஜிவால் எடுத்த புதிய முடிவு..! ரெடியான அடுத்த லிஸ்ட்..! திக்கி திணறும் அரசு அதிகாரிகள்..!!
ஜூன் 30ம் தேதியுடன் தலைமைச் செயலாளராக இருந்தவர் இறையன்புவம்.., தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்தவர் சைலேந்திர பாபு இவரகள் இருவரும் ஜூன் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றுள்ளனர்..
தலமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவும், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவாலும் நியாமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பொறுப்புக்கு வந்தவுடன் காவல் துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்..
தலைமை பொறுப்புகளுக்கு புதிதாக அதிகாரிகள் நியாமிக்கப் பட்டதும், அவர்களின் நிர்வாக வசதிக்காக தங்களுக்கு கீழ் உள்ள நிலைகளில் பொறுப்பு வகுக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்று, அந்த வகையில் சிவ்தாஸ் மீனா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்டுள்ளார்.
அதன் பெயரில் சங்கர் ஜிவால் குறிப்பிட்ட சில ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி ஒரு பட்டியலை தயார் செய்துள்ளார். மாவட்ட வாரியாகவும், மண்டல வாரியாகவும் காவல் துறை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளில் ஒரு சிலரை இடமாற்றம் மற்றும் பொறுப்பு மாற்றம் குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் எனவும் அவர் கூறினார்.
மேலும் அதுமட்டுமில்லாமல் உளவு துறையிலும் புதிய மாற்றத்தை கொண்டு வர சங்கர் ஜிவால் முயர்ச்சிகள் செய்து வருவதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு உளவுத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரிரு நிகழ்வுகளால் சற்று சர்ச்சையில் சிக்கியது அந்த சம்பவம் பல விமரசங்களுக்கும் உள்ளானது. உதாரணமாக கள்ளக்குறிச்சி பள்ளியை குறிவைத்து நடைபெற்ற கலவரம்.., கோவை கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் உளவுத்துறைக்கு நெருக்கடியை கொடுத்தது.
இந்நிலையில் சங்கர் ஜிவால் உளவுத்துறைக்கு டி.ஜி.பி அந்தஸ்தில் புதிய பதவியை உருவாக்க திட்டமிடுவதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மாற்றம் குறித்து தகவல்கள் வெளியான நிலையில் முக்கிய பணி இடங்களை பெறவும் உளவுத்துறையில் இருக்கும் பதவிகளில் இடம் பிடிக்கவும்.., அதிகாரிகளுக்கு இடையே பல போட்டிகள் நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post