செல்போன் தொலைந்து போனால் உடனே மீட்பு..!! வேலூர் டி.ஐ.ஜி புதிய அறிவிப்பு..!!
வேலூர் மாவட்டத்தில் செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ காவல்துறை வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கும் எண் அறிமுகம் டி.ஐஜி வெளியிட்டார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர்.
இந்த புகார் எண் மூலம் இம்மாவட்டத்தில் செல்போன் திருடு போனாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக 9486214166 என்ற எண்ணிற்கு வாட்டஸ் அப்பில் ஒரு மெசேஜ் செய்ய வேண்டும்.
பின் செல் டிராக்கர் என்ற கூகிள் பார்ம் உடனடியாக புகார் தெரிவிக்கும் எண்ணிற்கு வரும், அதில் செல்போன் எண் மற்றும் ஐ.எம்.ஈ எண் தொலைந்த இடம் அல்லது திருடு போன இடம் ஆகியவைகளை பூர்த்தி செய்து அனுப்பினால், சைபர் கிரைம் மூலம், புகார் பதிவு செய்து புகாருக்கான வரிசை எண் தரப்படும்.
உடனே சைபர் கிரைம் போலீசார் உடனடியாக செல்போனை கண்டுபிடித்து தர நடவடிக்கை மேற்கொள்ளுவார்கள். இந்த செயல் வேலூர் மாவட்டத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செல்போன் தொலைந்தாலோ அல்லது திருட்டு போனாலோ உடனடியாக காவல்நிலையம் செல்லாமல் பொதுமக்கள் புகார்களை இந்த வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டு கொண்டுள்ளனர்.
Discussion about this post