இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்…!! இரயில் தப்பி சென்ற வாலிபர்கள்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ரயிலில் தப்ப முயன்ற 2 வாலிபர்கள், ரகசிய தகவலின் பேரில் நிற்காத ரயிலை நிற்க வைத்து வாலிபர்களை பிடித்து, கேரளா போலீசாரிடம் ஒப்படைத்த திருப்பத்தூர் தனிப்படை போலீசார்
கேரள மாநிலம், பத்தின தட்டா மாவட்டம் கோனி என்ற பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பியூட்டிசனாக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் அறை எடுத்து தனியாக தங்கி உள்ளார். மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன்(24), ராபிக் இஸ்லாம்(25) ஆகியோர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி இளம்பெண் அதே பகுதியில் தனியாக நடந்த சென்று கொண்டிருந்தபோது அவரை அமீர் உசேன் மற்றும் ராபிக் இஸ்லாம் இருவரும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், கோணி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான இரண்டு வாலிபர்களையும் தேடி வந்த போது, இரண்டு வாலிபர்களும், ஜோலார்பேட்டை வழியாக சென்னை நோக்கி செல்லும் ரயிலில் தப்பிச் செல்வது தெரியவந்தது.
அதனையடுத்து கேரளா காவல்துறையினர், இது குறித்து திருப்பத்துார் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஷ்ரேயா குப்தா ரயில் மூலமாக தப்பி வரும் இருவரையும் பிடிக்கதனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்த தனிப்படை காவல்துறையினர் ரயிலுக்காக காத்திருந்தனர். ஆனால் அந்த ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தம் இல்லாததால், உடனடியாக இதுகுறித்து காவல்துறையினர் ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிற்க நடவடிக்கை மேற்க்கொண்டனர்.
அதன்படி வாலிபர் வந்த ரயில் நள்ளிரவு ஒரு மணியளவில் ஜோலார்பேட்டை 2வது நடைமேடையில் சிறிது நேரம் நின்றது. அப்போது காவல்துறையினர் மூன்று குழுக்களாக பிரிந்து ரயில் முழுவதும் சல்லடை போட்டு தேடி, ரயில் இன்ஜினில் இருந்து கடைசியாக உள்ள பொதுபெட்டியில் பதுங்கி இருந்த அமீர் உசேன், ராபிக் இஸ்லாம் இருவரையும் பிடித்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த கேரளா காவல்துறையினர் இரண்டு வாலிபர்களையும், கேரளா அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..