“பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு..” டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவருமாக இருந்த “பிரிஜ் பூஷன்” மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்யப்டட்டதாக புகார் அளித்திருந்தார்., இதுகுறித்து பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பிரிஜ் பூஷன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
ஆனால் பிரிஜ் பூஷன் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பஜ்ரங் புனியா , சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உட்பட பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.. ஆனால் போராட்டங்கள் கலைக்கப்பட்ட நிலையிலும் நீதி கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட வீராங்கனை பஜ்ரங் புனியா தான் பெற்ற பத்ம ஸ்ரீ விருதை பிரதமர் மோடி வசிக்கும் இல்லத்தின் முன் வைத்து சென்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது..
வீராங்கனைகளின் அத்தனை போராட்டங்களுக்கு பின்னரே பிரிஜ் பூஷன் மீது FIR பதிவு செய்யப்பட்டது., அதன் பின் பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் கிரிமினல் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது..
அதன் பெண் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கு ரத்து செய்யக்கோரி பிரிஜ் பூஷன் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..