முதியோர் & விதவைகள் உதவித் தொகை உயர்வு..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு எவ்வளவு தெரியுமா..?
முதியோர் உதவிதொகை திட்டத்தை பெற 65 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி 60 வயதாக மாற்றப்பட்டது. அதன் மூலம் பல லட்சம் முதியவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை முதன் முதலில் தொடங்கியவர் “இந்திரகாந்தி”. ஆரம்பத்தில் 200 ரூபாயாக இருந்த உதவி தொகை 800 ரூபாயக உயர்த்தி 1000 ரூபாயாக வழங்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து அமைச்சரவை கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது.., அமலாக்கதுறையினர் சோதனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதியோர் உதவிதொகை :
மேலும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் விதவை பெண்கள் குறித்த உதவி தொகையை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யபட்டுள்ளது என மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இது குறித்து எதுவும் தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எதுவம் பேசவில்லை.
ஆனால் இந்த திட்டம் கட்டாயம் அமலுக்கு வந்து விடும் என்று தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசியுள்ளார்.
விதவைகள் உதவி தொகை :
கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் மிக முக்கியமான ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது அது தான் வித்வா பென்சன் யோஜனா. விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
அதற்கு 18 வயதில் இருந்து 60 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதந்தோறும் விதவை பெண்களுக்காக 2250 ரூபாய் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது தற்போது அந்த ஊதியம் 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விதவை உதவி தொகை பெற்றுகொள்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் :
* ஆதார் அட்டை
* கணவரின் இறப்புச் சான்றிதழ் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* இருப்பிட சான்றிதழ்
* வங்கிக் கணக்கு எண்
* வயது சான்றிதழ்
* வருமான சான்றிதழ்
விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் மேலேக் கூறிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
Discussion about this post