நாமக்கலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முகாம்..!! மாநில வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பங்கேற்ப்பு..!
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தலைவிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் அருகில் நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பபதிவு முகாமில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்திட வேண்டும். மாநில வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல்மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையை திறந்து பேச்சு.
நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் ரூ.90.76 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாதலைமையில், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் கலைஞர் நகர் புறமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 90.76 இலட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரச்சந்தையின் மூலம் இந்த பகுதியில் 350 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. தேர்தல் நேரத்தில் அளித்தவாக்குறுதிகளில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்கள் பெண்களின்
மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மகளிருக்கான இலவச பேருந்து பயண சலுகைதிட்டம், புதுமைப் பெண் திட்டம், என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் பெரிதும் எதிர் பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும், திட்டத்தினை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் நாள் அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்கள். அதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடும்ப தலைவிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் அருகில் நடைபெற உள்ள விண்ணப்ப பதிவு முகாமில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் பாண்டமங்கலம் பேரூராட்சியில் 3 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல், சமுதாயக் கூடம் கட்டுதல், சமுதாயக் கூடம் புதுப்பித்தல், மழை நீர் வடிகால் அமைத்தல், சிமெண்ட சாலையை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல், நியாய விலை கடை அமைத்தல் என ரூபாய் 1.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு, ரூபாய் 2.45 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் பாண்ட மங்கலம் பேரூராட்சிக் குட் பட்ட பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செய்து தரப்படும். என வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கபிலர் மலை ஒன்றிக்குழு உறுப்பினர் திரு.சண்முகம், வட்டாட்சியர் பரமத்தி வேலூர் திருமதி.கலைச்செல்வி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் திரு.சி.சோமசேகர், துணைத்தலைவர் திரு.பெ.முருகவேல், வார்டு உறுப்பினர்கள் திருமதி.பா.மஞ்சுளா, திருமதி.ம.சிவகாமி, திருமதி.சோ.சுகந்தி, திருமதி.ரா.நித்யா, திரு.த.ஜெயராஜ், திரு.ம.முருகன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post