அருவியில் ஆட்டம் போடும் பொன்னியின் செல்வன் பூங்குழலி..! இளைஞ்சர்கள் மனசு அபேஸ்..!!
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்கள் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பாலி தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
பல முன்னணி நடிகர்களை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மியும் பாலி தீவுக்கு டூர் சென்றுள்ளார். இப்படியொரு அட்வெஞ்சரை தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
சமீபத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கொத்தா படு தோல்வியை சந்தித்த நிலையில், கொஞ்சம் மனசை ரிலாக்ஸ் செய்வதற்காக பாலி தீவிற்கு சென்றுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக கடலில் இருந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி வரும் முதல் ஃபிரேமே ரசிகர்களை மெர்சலாகிவிட்டது.
வந்தியத்தேவன் கார்த்தியை போலவே அனைத்து ரசிகர்களையும் வாய் பிளந்து பார்க்க வைத்துவிட்டார். இந்நிலையில், தற்போது அவர் பாலி தீவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் துல்கர் சல்மான் உடன் இணைந்து கேங்ஸ்டர் படமான கிங் ஆஃப் கொத்தா படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் போனது பெரும் அதிருப்தி அளித்தது.
இந்நிலையில், அடுத்த படத்திற்கு ரெடி ஆவதற்கு முன்பாக கொஞ்சம் மனசுக்கும் உடம்புக்கும் ரெஸ்ட் கொடுக்க பாலி தீவுக்கு தனது தோழிகளுடன் சென்றிருக்கிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.
பாலி தீவில் பல த்ரில்லான இடங்களுக்கு சென்று சாகசங்களை செய்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி அங்கேயுள்ள அருவி ஒன்றில் ஆனந்தக்குளியல் போடும் வீடியோ தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா உங்க அடுத்த படத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங் என்றும் ரசிகர்கள் பூங்குழலிக்கு கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜியை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
-கெளசல்யா
Discussion about this post