சீமான் மேடை பேச்சு..!! சர்ச்சையை கிளப்பிய கருத்துக்கள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு., கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்றது.,
அதில் அக்கட்சி தலைவர் விஜய் சில அரசியல் தலைவர்களை தாக்கி பேசினார்.., அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்..
இந்நிலையில் நேற்று சென்னை பெரம்பூரில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் அவர்களை பற்றி சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளார்..
அதாவது தவெக மாநாட்டில்., விஜய் கூறிய கொள்கைகளை அழுகிய கூமுட்டை என கூறியுள்ளார்.. அதேபோல்
திராவிடமும்., தமிழ்த் தேசியம் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார்.. ஆனால் அதனை சீமான் எனக்கு திராவிடமும்., தமிழ்த் தேசியம் என்னவென்றே தெரியாது விஜய் பேசியதை கேட்டு பயந்துவிட்டேன் என கிண்டலாக பேசியுள்ளார்..
அதேபோல் மாநாட்டு மேடையில் விஜய் நடந்துவந்ததையும் விமர்சித்து பேசியுள்ளார்.., அதாவது “நடுநிலை என்று கூறிக்கொண்டு ரோட்டுக்கு நடுவே நின்றால் லாரி வரும் போது சாலையில் அடிபட்டு இறக்க நேரிடும்..” என கூறியுள்ளார்.. இது விஜய் ரசிகர்களிடையே கடும் வெறுப்பை தூண்டியுள்ளது என சொல்லலாம்..
விஜய் பேசிய அரசியல் பேச்சுக்கு., சீமான் இதென்னடா காட்டுப்பூனைக்கும் நாட்டுக்கோழிக்கும் வந்த சோதனை என விமர்சனம் செய்துள்ளார்..
அதேபோல் வேலு நாச்சியார், சங்கரலிங்கனார் இவர்களை பற்றி எல்லாம் நான் பேச ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் பேசியதாகவும் சீமான் கூறியுள்ளார்.,
வேலுநாச்சியாரை பற்றி எல்லாம் விஜய்க்கு என்ன தெரியும்..? அந்த ஓவியத்தை வரைந்ததே நான் தான்.. வேலுநாச்சியாரை விட சிறந்த பெண்ணியவாதி யாரவது இருக்க முடியுமா..? அப்படி இருக்கும் பட்சத்தில் வேலுநாச்சியாரை பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது எனக்கூறியுள்ளார்..
விஜயின் கடைசி படத்துக்கு பின், மெயின் பிச்சர் வருவதை போல அந்த மாநாடு எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் தங்களின் கதை எனவும் கூறியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..