சாமியாரின் தலையை வெட்டுங்கள் ரூ. 100 கோடி தருகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என தெரிவித்தார்.
இது இந்து சமயவாதிகளும், பாஜகவினரும் பெரும் பொருளாக பேசி வரும் நிலையில் , உத்திரப்பிரதேச சாமியார் அமைச்சரின் தலைக்கு 10 கோடி என பகீரங்கமாக மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கு எதிர்கட்சி தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“நானும் கூறுகிறேன், அந்த சாமியாரின் தலையை வெட்டுங்கள் ரூ. 100 கோடி தருகிறேன். சாந்தமே உருவானவன் தான் சாமியார். அதை விட்டுவிட்டு நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று சொல்வது சாமியார் அல்ல; அவருக்கு பெயர் கசாப்புக் கடைக்காரர். நீங்கள் எல்லாம் சாமியாரா? ரவுடி. கருத்து தெரிவித்தால் உடன்படுகிறேன் அல்லது உடன்படவில்லை என்று கருத்தின் வழியாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி பேசுவது தவறானது. பிறப்பில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யார் பேசினாலும் அவர்கள் என் எதிரிதான். அது பிஜேபில எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும், நான் பயப்பட மாட்டேன்” என்றார்.
Discussion about this post