சாலை அமைக்கும் பணிகளை தாமதமாக செய்யக்கூடிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். பணிகளை தொடர்ந்து முடிக்க தாமதம் ஏற்படுத்தினால் அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் சேர்ந்த மக்கள் தொடர்பக அலுவலர்களுக்கான மண்டல பயிலரங்க நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சென்னை மக்கள் தொடர்பக இயக்குனர் அண்ணாதுரை,தென் கூடுதல் தலைமை இயக்குனர் பழனிசாமி ஆகியோர் கலந்து இதில் சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மக்கள் தொடர்பக அலுவலகம் தாயாரித்த திட்டங்களும் சாதனைகளும் என்ற புத்தகத்தை வெளியிட்டு மக்கள் தொடர்பக அதிகாரிகள் எவ்வாறு மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறையில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக சாத்திய கூறுகளை ஏற்படுத்தி தருவது என்பது தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்
சென்னை மாநகராட்சி பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு முக்கியமான பணிகள் 786.13 கிலோ மீட்டர் முடித்துவிட்டோம். ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மைக்ரோ ட்ரைநேஜ் 59.49 கிலோ மீட்டர் நடக்கிறது. சில இடங்களில் மரம் , மின்சார போர்டுகள் மாற்றும் பணிகள் நடக்கிறது. தொடர்ந்து மழை பெய்தாலும் எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை.மடிப்பாக்கம் ராம் நகர் ,குபேரன் நகரன் ,வளசரவாக்கம் ,முகலிவாக்கம் ,மன்னடி போன்ற விரிவாக்க பகுதிகளில் இருக்கக்கூடிய பணிகளால் அந்த பகுதிகள் சேரும் சகதியுமாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம், முழுமையாக பணிகள் முடியவில்லை என்றாலும் தற்காலிக சாலையை சீர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஏற்கனவே பணிகளை தாமதமாக செய்யக்கூடிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். பணிகளை தொடர்ந்து முடிக்க தாமதம் ஏற்படுத்தினால் அந்த ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் பாதுகாப்பற்ற முறையில் செய்தால் அந்த ஒப்பந்ததாரர்கள் மீதும் மேல் பார்வையாளர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் பேரிடர் காலத்தில் துறை ரீதியாக இல்லாமல் குழுவாக தான் செய்வதாகவும், 24 மணி நேரமும் கன்ட்ரோல் சென்டர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் மேலும் செப்டம்பர் 15 ம் தேதிக்குள் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 30 தேதிகுள் பணிகளை முடிக்க அறிவுறுத்தபட்டுள்ளதகாவும், மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்று வரும் பெரும் திட்ட பணிகள் 2025ல் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.