தம்பி விஜய் அரசியலுக்கு வரனும் அவர் வந்தால் தான் வலிமையா? இருக்குன்னு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடுத்துள்ள பேட்டி சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்ன என பார்க்கலாம்…
நடிகர் விஜய் படங்களைத் தாண்டி தன்னோட விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் தான் போன வருஷம் தன்னோட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக நிறுத்த அவர் அனுமதித்ததும், அதில் ஜெயிச்ச 51 பேர நேரில் கூப்பிட்டு வாழ்த்தியதும் அனைவரும் அறிந்த செய்தியே.
சமீபத்துல கூட அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரோட சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனுன்னு விஜய் உத்தரவிட்டதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவிச்சியிருந்தது அரசியல் வட்டாரத்துல பெரும் பரபரப்பைக் கிளப்புச்சி. அதோடு தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கும் மரியாதை செய்யும்படி உத்தரவிடப்பட்டதாக புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்திருந்தார். நீண்ட வருடங்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேச்சுகள் அடிபட்டு வந்த சூழலில் விஜய்யின் இந்த முயற்சிகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் விஜய்யோட இந்த முயற்சிகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிட்ட செய்தியாளர்கள் இன்னைக்கு கேட்டிருக்காங்க. அதுக்கு அவரு அரசியலுக்கான முயற்சியைத்தான் என் தம்பி விஜய் செஞ்சிக்கிட்டு இருக்காரு. அதை நான் வரவேற்கிறேன். மாற்றுக் கட்சி என்பது அரை நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வரும்பொழுது இன்னும் வலிமையாக இருக்கும்ன்னு பேசியிருக்காரு.
அதோட மட்டும் இல்லாம விஜய்யும் அரசியலுக்கு வரணுங்கிறது தான் என்னோட ஆசை, அதற்கான முயற்சிகள் தான் அவரும் இப்ப ஈடுபட்டிருக்காரு. நான் யாரையும் இதுவரைக்கும் ஆதரிச்சது இல்ல.. அரசியலுக்கு வந்தா தம்பி விஜய்தான் என்னை ஆதரிக்கனுன்னு சொல்லியிருக்காரு.
இதைக்கேட்டு, விஜய் ரசிகர்கள் டென்ஷன் ஆனாங்களோ இல்லையோ… ரஜினி அண்ட் கமல் ஃபேன்ஸ் செம்ம டென்ஷன் ஆகிட்டாங்க. ஆமாங்க 2021ம் வருஷம் சீமான் கொடுத்த பேட்டி ஒன்னுல ரஜினிகாந்தையும், கமல் ஹாசனையும் அடிக்கிற அடியில இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிங்கனுங்கிற ஆசை வரக்கூடாதுன்னு பேசியிருந்தார். இந்த எச்சரிக்கையை நீங்க விஜய்க்கு சேர்த்து சொல்லுறீங்களா? அப்படின்னு ரிப்போட்டர் கேட்டதுக்கு, இத நடிகர் விஜய்க்கும் சேர்த்து தான் சொல்லுறேன்னு வேற கெத்தா பேசியிருந்தார்.
இப்போ இந்த இரண்டு வீடியோவையும் கட்டிங், ஒட்டிங் பண்ணி சோசியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டு வர்ற நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா?ன்னு கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் விஜய் ஃபேன்ஸ் அது வேற வாய்… அது நார வாய் அப்படின்னு சீமானை பங்கமா கலாய்ச்சிட்டு இருக்காங்க.