பள்ளி மாணவியின் மது மோகம்..!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் நேற்று மாலை பள்ளி மாணவி ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார்.. +1 படிக்கும் இந்த மாணவிக்கு வெறும் 16 வயதுதான் ஆகிறது.. ரோட்டோரத்தில் இந்த பெண் விழுந்து கிடப்பதை பார்த்ததுமே, பொதுமக்கள் அந்த மாணவியின் பள்ளி அடையாள அட்டையை வைத்து அதில் உள்ள நம்பருக்கு போன் செய்து அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகளை பார்த்த அதிர்ச்சியில் செய்வதறியாமல் நின்றுள்ளனர்., பின் அப்பகுதி மக்கள் உதவியுடன் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கடந்த மதுபோதையில் இருப்பதாக கூறியுள்ளார்..
இதனிடையே அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு தகவல் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர். அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், அந்த மாணவி சேலத்தில் வசிப்பதாகவும் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்ததும், மது அறிந்துவிட்டு., மது போதையில் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மது போதையில் இருந்த பிளஸ்-1 மாணவியை 2 பேர் பைக்கில் அழைத்து வந்து அழகாபுரம் பகுதியில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.. அவர்கள் யார்..? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
ஆனால், அந்த மாணவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினாரா? அல்லது யாராவது அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது என்றனர்.
பெண்கள் கட்டுக்கடங்காத மதுபோதையில், தமிழ்நாட்டின் சாலைகளில் இப்படி விழுந்து கிடப்பது, பொதுமக்களுக்கு கவலையையும், வருத்தத்தையும், துயரத்தையும் தந்து வருகிறது.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..