நவராத்திரி கொண்டாட்டம்..! நள்ளிரவில் அகோரிகள் பூஜை..!!
நவராத்திரி விழா தொடங்கிய நிலையில் திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் உடல் முழுவதும் திருநீற்றை பூசிக் கொண்டு அகோரிகள் காட்சியளித்தனர்.
நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இந்த கோயிலில் காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகளை செய்து கோயிலையும் நிர்வகித்து வருகிறார்.
இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாளில் அகோரி காளி, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தார். அக்கோரியின் பூஜைகள் மற்றும் வாழ்க்கை., இதையடுத்து நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு சிறப்பு யாகங்களை செய்தனர்.
அப்போது மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்தார். பிறகு நவதானியங்கள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாக பூஜை செய்திருந்தார்.
அப்போது மற்ற அகோரிகள் சங்கை முழங்கினர். பிறகு ஜெய் கோர காளி, ஜெய் அஷ்ட கால பைரவர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகளையும் மகாதீபாராதனைகளும் செய்யப்பட்டது.
காசியிலும், நேபாளத்திலும் அகோரிகள் அதிக அளவில் காணப்படுகிறார்கள். இவர்கள் மண்டை ஓடுகளை வைத்தும் பூஜை செய்கிறார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் மிருகங்களை பலி கொடுத்து, இறந்த மனிதர்களின் மாமிசத்தை உண்பார்கள்.
இவர்களின் வழிபாடுகளை பார்க்கும் போது சற்று அச்சமாகவே இருக்கும். இவர்களின் வசிப்பிடமே மயானம் தான். அகோரிகள் என்பவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் மயானத்தில் உடல்களை எரித்த சாம்பலை தங்கள் உடலில் பூசிக் கொள்வார்கள் என்றும் இவர்கள் தனிமையிலேயே வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கும்பமேளாவின் போது மட்டும் ஒன்றாக கூடுவதாக சொல்லப்படுகிறது.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..