பெண்ணை நிர்வாண படுத்திய வஞ்சகர்கள் வீட்டுக்கு தீ வைத்த மணிப்பூர் பெண்கள்..!!
கடந்த இரண்டு மதங்களுக்கும் மேல் மணிப்பூரில் உள்ள மெய்த்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில்.., இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் காண்பவர் நெஞ்சை பத பதக்க வைத்தது. பெண்ணை நிர்வாண படுத்தியது மட்டுமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த கொடுமையை பார்த்து பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன் தட்டி கேட்ட பொழுது அவர்களையும் கொலை செய்து நடுரோட்டில் வீசியுள்ளனர்.
இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் போலீசார் வீடியோவில் பதிவாகியிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.., இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கைது செய்ய நான் உத்தரவிட்ட படி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வலி மற்றும் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் மக்களுக்கு என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என செய்தியாளர்கள் முன் பேசியிருந்தார்.
மணிப்பூர் பெண்கள் செய்த செயல் :
இந்த சம்பவம் குறித்து 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் சம்மந்தப்பட்ட அனைவரின் வீட்டையும் அடித்து உடைத்து “மெய்த்தேய் பெண்கள்” தீ வைத்துள்ளனர்.
ஹெய்ரெம் ஹெரோதாஸ் மெய்தேய் என்பவர் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மேலும் பேச்சி அவாங் லைகாய் பகுதியைவிட்டு ஹெரோதாஸை குடும்பத்துடன் வெளியேற்ற ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மெய்ரா பைபியின் தலைவர் ஒருவர், “மெய்தேய் மட்டுமல்ல வேறு எந்த சமூகமாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் புண்படுத்துவதை ஏற்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவரை நம் சமூகத்தில் வாழ அனுமதிக்க முடியாது. இது ஒட்டுமொத்த மெய்தேய் சமூகத்திற்கும் வெட்கக்கேடான விஷயம்,” என்று கூறினார்.
Discussion about this post