ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு..! அங்காள அம்மனுக்கு வளைகாப்பு..!
ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருளை பெறுவதற்கு ஏற்ற ஒரு “ஆடிப்பூரம்” இந்த நாள் அம்மன் அவதரித்த ஒரு நாள் குறிப்பாக “ஆண்டாள் நாச்சியார்” அவதரித்த தினம் தான் “ஆடிப்பூரம்” ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றனர்.
ஆண்டாள் நாச்சியார் அம்மனை போற்றும் விதமாக தான் “ஆடிப்பூரம்” கொண்டாடப்படுகிறது. சைவ வைணவ பாகுபாடு இன்றி அனைத்து அம்மன் கோவில்களிலும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு உற்சவ நாள் “ஆடிப்பூரம்“. முனிவர்களும் அம்பிகை அம்மனுக்காக ஆடிப்பூர நாட்களில் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
உலகத்தை காக்கும் அன்னை உமாதேவியும் இந்த நாளில் அவதரித்தாள்.., இன்னும் பிரசித்தி பெற்ற மாதமாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனகாப்பு, குங்குமகாப்பு, வளைகாப்பு மற்றும் வளையல் அலங்காரம் பக்தர்களால் நடத்தப்படும்.
ஆடிப்பூர வழிபாடு :
ஆடிப்புரதன்று பல அம்மன் கோவில்களில் வளைகாப்பு திருவிழா நடத்தப்படும். அந்த சமையத்தில் அம்மன் களுக்கு வளையல் வாங்கி கொடுத்தால். அதாவது திருமணம் ஆகாத பெண்கள் வாங்கி கொடுத்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வாங்கி கொடுத்தால் குழந்தை வரம் கிடைக்கும். அடுத்த ஆடிப்பூரத்திற்குள் வீட்டில் சீமந்தம் நடந்து விடும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரத்தன்று அங்காள அம்மன், ஆண்டாள் அம்மன் மற்றும் பார்வதி தேவி அம்மன், வணங்கி வழிபட்டால்.., பிடித்த வாழ்க்கை அமையும் மற்றும் தீய சக்திகள் விலகும் என்பது ஆன்மீக உண்மை. ஆடிப்பூரத்தன்று அம்பிகை அம்மன் பூமிக்கு வந்து ஜீவ ராசிகளுக்கு அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். அந்த நாளில் அம்மன் கோவிலுக்கு சென்று நம் வழிபட்டால்.., நினைத்த செயல் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது உண்மை. எனவே இந்த நாளில் சிறிய அம்மன் கோவிலாக இருந்தால் கூட.., விசேஷமான பூஜைகள் நடக்கும் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், திருதலங்கள், பரிகாரங்கள், பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post