சவுக்கு சங்கர் குண்டார் சட்டம் வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர். பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை 10 வழக்குகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து கடந்த ஜூலை 29ம் தேதி இரவு ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்திருந்தார். இதையடுத்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் அவரது தாய் கமலா கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்..
சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோலவே அவதூறு கருத்துகளை சொல்லி வருவதாகவும், அதனை தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.., இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின் தீர்ப்பு வழங்கப்பட்டது..
யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..