மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி வழிபாடு
விருத்தாச்சலம் அடுத்து இருக்கும் மணவாள நல்லூரில் கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இங்கு சஷ்டி அன்று மூலவர் கொளஞ்சியப்பருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனையும் செய்யப்படும்.
பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார், இவரை காண ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.

மேலும் சஷ்டி அன்று விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்று பல பக்தர்கள் சொல்கின்றனர்.
இக்கோயிலில் பல விவசாயிகள் அவர்களது நிலங்களில் விளைந்த, விளைச்சலை கொண்டு வந்து சூறைவிடுவார்கள், அப்படி சூறை விட்டால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் அசைக்க முடிய நம்பிக்கையாக உள்ளது.
பங்குனி மாதம் அன்று விஷேசமாக இருக்குமாம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள், இங்கு திருவிழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும் என்று சொல்கின்றனர்.
-வெ.லோகேஸ்வரி