தமிழ்நாடு அரசு சார்பில் ஜவுளி விற்பனை..!! 30% தள்ளுபடியுடன்…!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள கோஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில் சேலம், ஆரணி, காஞ்சிபுரம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், சேலைகள், வேஷ்டிகள் உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஜவுளிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 30 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில் :
ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தேசங்களிர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ரோப் கார் பயன்படுத்தி எளிய முறையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோப்கார் விபத்துக்குள் சிக்கினால் விபத்தில் இருந்து எப்படி பக்தர்களை காப்பாற்றுவது என தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பித்துனர். இதில் உதவி ஆணையர் ஜெயா, வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் பேரிடர் மீட்பு பணி வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி :
அரியலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து நடத்திய வேளாண் இயந்திரங்களின் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் வேளாண் இயந்திரங்களை பார்வையிட்டு இயந்திரங்களுக்கு மத்திய மாநில அரசுகள் தரக்கூடிய மானியங்கள் குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..