அடுத்த “சிலுக்கு நான் தான்”.. சாக்ஷி அகர்வால் போட்டோ பார்த்து கிரங்கி போன ரசிகர்கள்..!!
முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சாக்ஷி அகர்வால் இணையத்தில் ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.7 மில்லியன் பாலோவர்கள் கொண்ட சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார்.
டெடி, விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார்.இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் களைகட்டியது.
சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும், ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இவரது ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
குட்டி டவுசர் போட்டுக்கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அணிந்திருக்கும் உடை தாறுமாறாக கிழிந்து தொங்கி கொண்டிருக்க, விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த பேன்ஸ் ஆத்தாடி என்ன இது என்று வாயைப்பிளக்க வைத்துவிட்டார் சாக்ஷி அகர்வால், மேலும் ரசிகர்கள் இவங்க மொத்தமாவே சில்கா மாறிட்டாங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
-கெளசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..