சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் ஶ்ரீநிவாசனுக்கு “சாஹிப் ஜாதா” விருது.
சிவன் சீனிவாசன் தமிழ் திரையுலகில் ஒரு பிரபலாமான நடிகர்., சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட “ராசாத்தி” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவரின் இயற்பெயர் ஜி.சீனிவாசன். இவர் சிவன் கதாபாத்திரத்தில் நடித்ததால் மக்கள் அவரை சிவன் சீனிவாசன் என்று அழைக்கத் தொடங்கினர்.
“திருவிளையாடல் புராணம்” தான் சிவனாக நடித்த முதல் தொடர். அப்போது அவருக்கு சிவன் வேடத்தில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர் ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியுள்ளார். அவன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவனுடைய மறக்க முடியாத அனுபவம் ஒன்று நடந்தது. பள்ளி நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்தார்.
பிரதம விருந்தினர் இவரின் நடிப்பை விரும்பி அவரை மேடைக்கு அழைத்து அவரைப் பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்தார். அவர் இப்போதும் தனது கனவைத் தொடர்கிறார். அவரது நடிப்புத் திறமைக்காக “கலைமாமணி விருது” பெற்றார். இவர் மறைந்த தலைவர்களிடம் பாராட்டு பெற்றவர். நடிகராக அவரது பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல் :
5250 நாடக மேடைகளை கடந்து வெற்றிகரமாக கலைப்பணியில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும், தமிழக அரசின் கலைமாமணி விருதாளருமான திருவாளர் சிவன் ஶ்ரீனிவாசன் அவர்களின் தொடர் மானுட சேவையை பாராட்டும் வகையில் இன்று 14/07/2024 காரைக்கால் அம்மையார் கோயில் மணி மண்டபத்தில் நடைபெற்ற “நேரம் நல்ல நேரம்” நாடகத்தில் இந்த வருடத்திற்கான “சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல்” விருது அதன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது பெற்ற சிவன் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பவுண்டேசன் செயலாளர் M. முஹம்மது தாஹா மரைக்காயர், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் சேக் மிரான் சாஹிப் மற்றும் காரைக்கால் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது ஆரிப் மீயர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்வில் காரைக்கால் சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம், கலைமாமணி காரை சுப்பையா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
– லோகேஸ்வரி.வெ