காமராஜரின் 122வது பிறந்தநாள் கொண்டாட்டம்..! தவெக சார்பில் மாணவர்களுக்கு..! வைரலாகும் வீடியோ..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு வழங்க சென்ற இடத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பிறந்தநாளை அறிந்து சால்வை அணிவித்து கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் வண்டலூர் பிரதான சாலையில் உள்ள மாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க திட்டமிட்டு 250 மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கினர்.
கல்வி உபகரணம் வாங்க வரிசையில் வந்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவி தீபிகாவிற்கு இன்று பிறந்தநாள் என்று சக மாணவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்ட கட்சி உறுப்பினர்கள் அந்த மாணவிக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி கைதட்டி கௌரவித்து பாராட்டினர்.
4ம் வகுப்பு மாணவிக்கு சால்வை அணிவித்து அரசியல் கட்சியினர் பிறந்தநாள் வாழ்த்து கூறியதை பார்த்த சக மாணவர்கள் கைதட்டி மகிழ்ந்தனர். இந்த செயல் சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..