நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்து இந்த திட்டம் குழந்தைகள் தினம் அன்று முதன் முதலாக கலகபுரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, புத்தகம்,சீருடை, மதிய உணவு இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் இவற்றை எல்லாம் சரி செய்யாமல் பள்ளிகளில் காவி நிறத்தை அடிப்பதையே அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றார்.
இதற்கு கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறுகையில், இது போன்ற விசியங்களில் அரசியல் செய்வது சரி கிடையாது மேலும் காவி என்பது தேசியக் கொடியில் ஒரு நிறம் என்றும் இதை பார்க்கும் பொது காங்கிரஸ்க்கு எதற்காக அதிருப்தி அளிக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.