முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக வில் பல திருப்பங்களும் மாற்றங்களும் நடந்து கொண்டே உள்ளது. சமீபகாலமாக அதிமுக வில் இரட்டை தலைமை விவகாரம் பெரிய விவகாரமானது, இதில் இ.பி.எஸ். மற்றும் ஓபிஎஸ் தனி தனி அணியான பிரிந்து சென்று மோதல் வெடித்தது பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் இ.பி.எஸ். க்கு ஆதரவாகவும் மிக குறைந்த அளவிலேயே ஓபிஎஸ் ற்கு ஆதவாளர்கள் உள்ளனர். மேலும் அதிமுக வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பிஜேபி யே தலையிட்டு தீர்த்து வருகிறது இது அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருளாகவும் உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோர் அடுத்த அடுத்த நாட்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். மோடியை சந்திக்க ஓபிஎஸ் க்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே மோடியை மதுரை விமான நிலையத்தில் இ.பி.எஸ். வரவேற்றார். இதை தொடர்ந்து அடுத்த நாள் இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சர் சென்னை வந்தார் அதில் ஓபிஎஸ் கு அனுமதி அளிக்கபட்டாலும் மத்திய அமைச்சரை தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சற்று ஏமாற்றத்திலிருந்த ஓபிஎஸ் இன்று செய்தியாளராகளை சந்தித்தார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமிட்ஷா யும் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்னுடைய ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் 10% இட ஒதுக்கீட்டை அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.