பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்..!!
நேற்று வைகாசி அமாவாசை என்பதால் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மிளகாய் யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தை சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி செய்து வைத்தார்.
இந்த யாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக நேற்று காலை முதலே கோவிலில் உள்ள மாடுகளுக்கு அகத்திக்கீரை உணவுகளை வழங்கி கோ பூஜை நடத்தி வைத்தனர்.
கோ பூஜையை தொடர்ந்து நரசிம்மரின் கலசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரத்தியங்கிரா தேவி அம்மன் .., பூ அலங்காரத்தில் தோற்றம் அளித்தார்.
பின் வேத மந்திரங்கள் முழங்க வைகுண்ட மண்டபத்தில் மூட்டை.., மூட்டையாக மிளகாய் கொட்டி யாகம் நடத்தினார். இந்த யாகம் உலக மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் பூஜை என்றும் கூறினார்.
அதில் கலந்து கொண்டு பக்தர்கள் மிளகாய், மற்றும் பனை ஓலையை யாக குண்டத்தில் போட்டு வேண்டுதல் வைத்து சென்றனர்.., இந்த யாக பூஜையை இணையதளம் வழியாக அனைவரும் பார்க்கும் படியும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post