திருமணத்தடை நீக்கி மாங்கல்ய வரம் தரும் சப்த கன்னியர்கள், இந்த வழிபாடு மிக அவசியம்..!
மற்ற தெய்வங்களை எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அதே அளவிற்கு.., நாம் வழிபாடு சப்த கன்னியரையும் வழிபாடு செய்ய வேண்டும்.., சப்த கன்னியரை வழிபாடு செய்வதனால் கன்னிதோஷம் நீக்கப்பட்டு திருமண வரன் தேடி வரும்.
* சென்னை பழவந்தாங்கல், அருகே உள்ள, வேம்புலியம்மன் கோவிலில், தனி மண்டபத்தில் சுதை வடிவில் சப்த மாதர்கள் தத்தமது வாகனத்தின் மேல் சப்த கன்னியர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். சென்னை மக்கள் மாதத்தில் ஒருமுறை அல்லது இருமுறையாவது இங்கு செல்லலாம்.
* மதுராந்தகத்தை அடுத்த முதுகரை கிராமக் குளக்கரையில் உள்ள சப்தகன்னியருக்கு பொங்கல் வைத்து வணங்கி வழிபட்டால் தாலிபாக்கியம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
* கோயமுத்தூர் மருதமலையில் பாம்பாட்டிச் சித்தர் சந்நதியின் அருகே சப்தகன்னியர் விசேஷமாக இருக்கிறார். கன்னிப் பெண்கள் 3 வெள்ளிக் கிழமைகள் விரதம் இருந்து, இவர்களுக்கு மஞ்சள்பொடி அபிஷேகம் செய்து வந்தால், விரைவில் திருமணம் ஆகும்.
* திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு வழியே செல்லும் செம்பாக்கம் கிராமத்தில், ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சப்தகன்னியர் களுக்கு, வெள்ளிக்கிழமை அன்று பொங்கல் வைத்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது உண்மை.
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அருகே புற்று மண்டபத்தின் வலப்புறம் கன்னி கோயில் என்ற இடத்தில் சப்த கன்னியர் அருள் பாலிகின்றனர். ஆதிபராசக்தி அன்னையின் அருளால் ஏலப்பட்ட சன்னதி என்ற பெருமை இத் திருத்தலத்திற்கு உண்டு.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..