சபரிமலை மண்டல கால பூஜை…!! தேதியை அறிவித்த தேவஸ்தானம்..!!
சபரிமலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்
சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்து 23 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கடந்த நவம்பர் 15ம் தேதி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். மேலும் தினசரி ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் சபரிமலையில் 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..