தனியாக உள்ள வீடுகளுக்கு ஸ்கெட்ச்..!! போலீஸ் விசாரணை தீவிரம்…!!
சொகுசு காரில் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த காரைக்கால் சேர்ந்த 5 பேரை பள்ளிப்பட்டு போலீசார் கைது செய்து கார் பைக் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொதட்டூர்பேட்டைக்கு செல்லும் கூட்டு சாலையில் தனியாக நின்றிருந்த காரில் 5 பேர் இருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் போலீசார் காரில் சோதனை ஈடுபட்டனர். அப்போது அரிவாள், இரும்பு ராடு திருப்பலி போன்ற ஆயுதங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விவேக் (30),முஹம்மது கைஃப் (22),மணிகண்டன் (29),பெருமாள் ராஜா (41),அண்ணாதுரை(29), ஆகியோர் கூட்டாக சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் பைக் திருடி வரும் வழியில் சர்ச் உண்டியல் உடைத்து காணிக்கை திருடியது தெரியவந்தது.
பள்ளிப்பட்டு பகுதியில் தனியாக இருக்கும் வீட்டில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க சொகுசு காரில் மாநிலம் வீட்டு மாநிலம் சென்று கொள்ளையடித்து வருவதாக விசாரணையில் தெரிவித்தனர். போலீசார் கொள்ளையர்கள் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..