ரஷ்ய ராக்கெட் தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் கொல்லப்பட்டார்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 23 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன்-ரஷ்யா போரானது 3 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்துள்ளார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகையும் உறுதி செய்துள்ளது.
உக்ரைன் நாட்டில் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.