தமிழ்நாடு அரசின் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று (மார்ச்.18)காலை 10 மணியளவில் தொடங்குகியது. இதில், தமிழ்நாடு அரசின் 2022 – 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.