குடிபோதையில் ரஷ்ய ராணுவ வீரர்களால் 10 வயது உக்ரைன் சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. இன்றுடன் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், குடிபோதையில் ரஷ்ய ராணுவ வீரர்களால் 10 வயது உக்ரைன் சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த சிறுமியின் உடலை கல்லறைக்கு செல்ல விடாமல் ரஷ்ய வீரர்கள் தடுத்ததை அடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அவரின் உடலை வீட்டின் அருகே புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று சிறுமியின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.