கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து உக்ரைன் மற்றும் ரசியா இடையில் போர் நடந்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் பல பொருட்சேதங்களும் பல உயிர்களையும் இழந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வானத்திலும் ரசியா தனது போரை தீவிரபடுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இருந்து உக்ரைனிய எரிசக்தி கட்டமைப்புகளைக் குறி வைத்து ரஷ்யா படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், ரஷ்ய படைகள் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதால் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் ரஷ்யாவுக்கு ஈரான் ட்ரோன்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டினார் அனால் அதற்கு ஈரான் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் மிக முக்கிய அங்கமான எரிசக்தி மீதே ரசியா தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன மேலும் ரசியாவின் இந்த தாக்குதலால் பொதுமக்கள் பலர் உயிரிழக்ககூடும் என்பதால் போரை நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.