இந்தியா நாட்டின் பிரதமரின் வெளிநாட்டு சுற்று பயணம் குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் கேள்வி கேட்கபட்டது அதற்கு மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2017ம் ஆண்டு முதல் பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்தான கேள்வி குளிர்கால கூட்டத்தொடரில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். அதன்படி கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரையிலான 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி 36 முறை வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளார்.
மேலும், 29 பயணிகளுக்கான மொத்த செலவு ரூ.239 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்திற்கு மட்டும் ரூ.23.27 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. பிரதமரின் வெளிநாடு பயணங்களின் செலவு 200 கோடிகளுக்கு மேல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.