உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஆப்ரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக அழைத்து வரப்படுகின்றனர்.
இதையடுத்து, உக்ரைன் லிவிவ் நகரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் உறுதி செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அதன்படி, மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வகையில் மனிதாபிமான அடைப்படையில் தற்காலிகமாக இந்த போரை நிறுத்துவதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.