கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 116 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதி விசாரணை பிப்.9ல் முடிந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.