அப்போலோ மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை..!!
வேலூர் மாவட்டம், ஆற்காடு சாலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையின் தகவல் மையம் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் ரமேஷ் மற்றும் டாக்டர் இந்திரஜித், வேலூரில் அப்போலோ மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பமான ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதியும் உள்ளதாக தெரிவித்தனர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகப்பா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்குமார் இவரது வீட்டின் கீழ் பகுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 4 பேரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நபிலன் உயிரிழந்தார். இதனிடையே திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்
ராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கர் வட்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செங்காடு கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மாணவர்களுக்கு மரம் நடும் அறமே மாபெரும் அறம் என்ற உறுதிமொழியை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் எடுத்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள், சார்பாக மேற்கொள்ளப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..