பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பில் இருந்த டிஎஸ்பி..!! வாட்ஸ் அப்பில் வந்த பேசேஜ்..!! அதிகாரிகள் அதிரடி..!!
பாலியல் தொழில் கும்பலுடன் தொடர்பில் இருந்த டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் அடுத்த உளுந்தூர்பேட்டையில் பல வருடங்களாக பாலியல் தொழில் நடைபெற்று வந்துள்ளது., இதுகுறித்து அந்த கிராம மக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது காரணம் அந்த கும்பல் தலைவியுடன் அம்மாவட்ட டிஎஸ்பி தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்., அது பற்றி விசாரணை செய்த போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
உளுந்தூர்பேட்டை சின்னசாமி நகர் பகுதியில் வசிக்கும் கல்பனா (வயது 44) என்ற பெண் பல இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்து அவர்களின் புகைப்படங்களை இளைஞர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி., பின் அவர்கள் விரும்பும் பெண்களை ஒரு இடத்திற்கு வரவழைத்து பாலியல் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார்..
இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது அதன் பேரில் தகவல் அறிந்த வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி பாலியல் தொழில் செய்த 6 பேரை கைது செய்துள்ளார்..
கல்பனாவிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுதும் பெண்கள் மற்றும் சிறுமியின் படங்களை பலருக்கும் பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்தது..
இந்நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தமிழ்நாடு முழுவதும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்டு அதற்கு துணையாக உள்ளவர்களை கைது செய்ய கள்ளக்குறிச்சி காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்..
மேலும் இந்த தொழிலில் ஈடுபடும் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து கட்டாய படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்களா..? அல்லது தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களுடன் தொடர்பு வைத்து கமிஷன் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா..? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்பட்டு வரும் இந்த பாலியல் தொழில் கும்பலுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்ய போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது…
கல்பனாவுடன் தொடர்பில் இருந்த 126 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்., கல்பனாவின் வாட்ஸ்-அப் குழுவில் காவல் துறை அதிகாரி, தொழிலதிபர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலரும் தொடர்பில் இருந்தது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முக்கியமாக உளுந்தூர்பேட்டையின் டிஎஸ்பியாக இருந்த மகேஷ், சமீபத்தில் நாகப்பட்டினத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் அவரும் கல்பனாவுடன் தொடர்பில் இருந்ததும், அவ்வப்போது டிஎஸ்பி மகேஷின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பெண்களின் படங்கள் அனுப்பப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணுடன் டிஎஸ்பி இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தற்போது நாகப்பட்டினம் டிஎஸ்பியாக உள்ள மகேஷை சஸ்பெண்ட் செய்து மத்திய மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..