உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு பேருந்து நிலையத்தில் 2 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய புறநகர் பேருந்துகளை ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர் காந்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
அரியலூர் மாவட்டம், போக்குவரத் துத்துறையின் சார்பில், தென்னூர் – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித் தடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குநர், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் லட்சுமி, விநாயகர் சதுர்த்தி விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..