ஆர்.ஜே பாலாஜி 39…ரேடியோ ஜாக்கியிலிருந்து ஹீரோ…!
ரேடியோ ஜாக்கியாக பல நிகழ்ச்சிகளை சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும் வண்ணம் கொடுத்தவர் ஆர் ஜே பாலாஜி.
ஒரு கட்டத்தில் காமெடியனாக இவர் சினிமாவில் நடிக்க தொடங்கி தொடர்ந்து படங்களை நடித்து இயக்கவும் செய்தார்.
அந்த வகையில் இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான எல்கேஜி படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. அரசியலை காமெடியாக சொன்ன இந்த படத்தின் திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதுமட்டும் இன்றி ஐபிஎல், உலகக்கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
ஆர்.ஜே. பாலாஜி தான் நடிக்கும் படங்களில் காமெடியோடு சேர்ந்து சமூக கருத்துகளை பேசும்வார்.
இதனால் ஆர்.ஜே பாலாஜி நடிக்கவுள்ள இந்த படத்தின் கதை எந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்.
இவ்வாறு தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜி இன்று அதாவது ஜூன் 20ஆம் தேதி தனது 39வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். எனவே இவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
–பவானி கார்த்திக்