விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய சரியான நேரம்..? இதை செய்ய மறக்காதீங்க..!!
எந்த ஒரு பூஜைகள் செய்தாலும், தொழில் தொடங்கினாலும் முதலில் வணங்கும் தெய்வம் “விநாயகர்”.. அப்படி பலரும் போற்றும் விநாயகரின் சிறப்பு நாளாக கொண்டாடப்படுவது “விநாயகர் சதுர்த்தி”…
ஆவணி மாதத்தின் முதல் வளர்பிறை சதுர்த்தி திதியில் வரும் நாளையே விநாயகர் சதுர்த்தி என அழைப்போம்.. அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இன்றைய நாளில் விநாயகரை வீட்டில் வைத்து பூஜைகள் செய்து அன்று மாலை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்..
ஆனால் ஒரு சிலருக்கு எந்த முறையில் வழிபட வேண்டும்.., என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டும் என்ற குழப்பங்கள் இருக்கும். அப்படியாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வீட்டில் எப்படி எளிமையான முறையில் வணங்க வேண்டும் என்பதை பற்றி படிக்கலாம்…
பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி களிமண்ணால் ஆன விநாயகர் அல்லது மாவினால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபட வேண்டும்.. அப்படி வழிபடுவது தான் சிறப்பும் கூட..
விநாயகர் சதுர்த்தி அன்று காலை 9 மணிக்குள் அல்லது மதியம் 1 மணிக்கு பூஜைகள் செய்து படையல் வைத்து விட வேண்டும். அதற்கு காரணம் (காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது)
பூஜை செய்வதற்கு முன் விநாயகர் சிலைக்கு முன்பாக வாழை இலை போட்டு வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, வாழைப்பழத்தை வைக்க வேண்டும். பின்னர், விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு போன்றவற்றை படையலிட வேண்டும்.
இத்தனை பொருட்களை வைத்து படையல் வைக்க முடியாவிட்டாலும் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்து வழிபட்டாலே போதும். குறிப்பாக விநாயகருக்கு விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் மிகவும் பிடிக்கும் அவற்றில் ஏதேனும் ஒரு பழங்களை வைத்து வழிபடலாம்..
விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும். விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறந்த நற்பலன்களை கொடுக்கும்.
பிறகு மாலை அணிவித்து, படையலிட்ட பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை மனதார வழிபட்டு விநாயகருக்கு படைத்த பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் சாப்பிடாமல் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு வழங்கி சாப்பிட விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..