வெளியான பாஜகவின் அம்பலம்..!! உறுதியான பாசிச சக்தி..?
நாங்கள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருப்பது பாஜகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிச்சலின் வெளிப்பாடாகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர் பொன்முடி வழக்கில் – தனிநபர் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட்டு, இனிமேலாவது அவர் நேர்மையான முறையில் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என திருமாவளவன் பேட்டி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமலஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இருவரும் விழுப்புரம், சிதம்பரம்,மதுரை, திண்டுக்கல், ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்பரை மேற்கொள்ள வேண்டும் என இரு கட்சி தலைவர்களும் கமலுக்கு அழைப்பு விடுத்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது,,,,,
கே.பாலகிருஷ்ணன் பேட்டி:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உண்மையிலேயே ஜனநாயக எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை குறித்து எங்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்
குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது உட்பட இந்த தேர்தல் எதிர்காலத்தில் இருக்குமா என்பதை கூட சந்தேகமாய் இருக்கிறது என்று கூறினார் இந்திய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விரைவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் இந்திய கூட்டணிக்கு மேலும் பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த அணி மாபெரும் வெற்றி பெறும் என்பதை குறித்துதான் நாங்கள் பார்க்கிறோம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அவசர அவசரமாக கைது செய்தது பாஜக வெறிதனத்தோடு செயல்படுகிறது
உண்மையில் பாஜக படு தோல்வி அடையும் என்ற பயத்தில் இப்படி வெறிகொண்டு செயல்களை செய்து அமலாக்கத் துறையை வைத்து ரைட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தங்களுக்கு சவ குழியை தோண்டி கொள்கிறார்கள் இது எதிரொலியாக மக்கள் மிகப்பெரிய கோவத்தோடு பாஜகவின் மக்கள் அடிப்பார்கள் என்று தெரிகிறது
40 தொகுதிகளிலும் கமலஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறினார், தேர்தல் பிரச்சாரத்திலேயே விதிகளை மீறிய பல புகார்கள் எழுந்துள்ளது. மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்
கூட்டம் வராததால் மாணவ மாணவிகளை கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டத்தை தேர்தல் விதிமுறைகளை செய்துள்ளார்கள், பாஜக இதைப் பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை
தேர்தல் பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக அகில இந்திய தலைவர்கள் வருகை தருகிறார்கள்,
திருமாவளவன் பேட்டி:-
அனைத்து ஜனநாயக சக்தியும் ஓரணியில் திரண்டு வருகிறது. இதற்கு அடையாளமாக தான் இந்தியா கூட்டணி உருவாக்கியது சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்க வர வேண்டும் என கமலஹாசனிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்
அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை குறித்து – பா.ஜ.க தன்னை தானே அம்பலப்படுத்திக் கொண்டு பாசிச சக்தி என்பதே உறுதிப்படுத்தி உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இதை எதிர்பார்த்து காத்திருந்தார் என்பதே உண்மை பலமுறை அவரை விசாரிக்க அழைப்பு விடுத்தும் அவர் பொருட்படுத்தவில்லை
எதற்காக இவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி உடன்படிக்கை ஏற்படாது என பாஜக நம்பிக்கொண்டிருந்த நிலையில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருப்பது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிச்சலின் வெளிப்பாடாகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், இந்தியா கூட்டணிக்கும் சாதகமான பயன் தான் கொடுக்கும். பாஜக பாசிச போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவி நடவடிக்கைகளை கண்டித்து இருக்கிறது. இனிமேலாவது அவர் நேர்மையான முறையில் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.தனிநபர் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது. பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்குப் உடனுக்குடன் சின்னம் ஒதுக்கிறார்கள் தேர்தல் ஆணையம் அரசியல் தலையீடின்றி சுதந்திரமாக இயங்க வேண்டும். பல மாதமாக சின்னத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறோம்.
எங்களுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் காலதாழ்த்தாமல் எவ்வித சுணக்கமும் இன்றி சின்னத்தை கொண்டு சேர்ப்போம்.
பா.ஜ.க டெபாசிட்டாவது இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள் தமிழகத்தில் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் நடக்காது. தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பது தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபிக்கும்
தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி வற்புறுத்திய நிலையில் ஓ பன்னீர்செல்வம் அதற்கு இணங்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. தனிச்சின்னத்தில் போட்டியிட முன் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..