டால்பின் இனம் அழியுதா..? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!!!
நதி டால்பின்கள் அடுத்த 20 முதல் 40 ஆண்டுகளில் அழிவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
பெரு நாட்டில் உள்ள அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய நதி டால்பின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சம் அடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் மண்டை ஓடு என மதிப்பிடப்பட்டுள்ளது.
அழிந்துபோன இனத்தைச் சேர்ந்த இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் இது மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய இனத்தின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு, உலகின் எஞ்சியிருக்கும் நதி டால்பின்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்துவதாகவும், இதனால் அடுத்த 20 முதல் 40 ஆண்டுகளில் இதேபோன்ற அழிவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..