போர்களத்தில் மயிலாடுதுறை..!! குவிக்கப்பட்டுள்ள போலீஸ்..!!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார் (26). நேற்று இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தெற்கு வீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் உறவினர் சரவணன் உடன் வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் அஜித்குமார் பலியானார்.
உடன் வந்த சரவணன் கையில் வெட்டுக் காயத்துடன் தப்பித்தவர் போலீசாரால் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அஜித்குமார் உடல் கைப்பறப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் நேற்று இரவு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
இன்று மீண்டும் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது பழைய பேருந்து நிலையத்திற்கு பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் கடைகளை அடித்து உடைத்து பேரிகார்டுகளை சாலையில் தள்ளியதால் பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்லாமல் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து எஸ் பி மீனா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி அடைந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையின் பின்னணி :
கடந்த 2022-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரமுகர் கொத்ததெரு கண்ணன் படுகொலையில் அஜித்குமார் ஒரு குற்றவாளியாவார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் அஜித்குமார் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாமக பிரமுகர் கண்ணன் படுகொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற பல கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் போராட்டக்காரர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் விரைந்து குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
அதை தொடர்ந்து உயிரிழந்த அஜித்குமாரின் பெற்றோர்களை மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அஜித் குமாரின் தாயார் கண்ணீருடன் அழுது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆனாலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் குற்றவாளிகளை கைது செய்ய கோரி பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்தரப்பினர் இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றவர்களை காவல்துறயைினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா போராட்டக்காரர்களிடம் 1 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக அவர்களிடம் தெரிவித்தார். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினர் இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதகாப்பு போடப்பட்டுள்ளது. ஏதும் போராட்டக்காரர்கள் பெருந்துறை அருகே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..